அருள் பணி: அழைப்பா! அல்லது பிழைப்பா!
இறை இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே!
எது அருள் பணி? அழைப்பா! அல்லது பிழைப்பா! என்கிற மையக்கருத்தை ஆழமாக சிந்திக்க, அவற்றை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம். எது அருள் பணி என்கிற கேள்விக்கு இது அல்லவா அருள் பணி என்கிற பதில் அமைகிறது.
அருள் பணி: இறைவனால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் இறைவனை அறிந்து, அன்பு செய்து, தொண்டு புரிந்து, தொழுது, அவரை அடைந்து, நிலையான பேரானந்த பெருவாழ்வு வாழ்வதே அருள் பணி.
அழைப்பு பெற்றவர்கள் பலர் ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர். (மத்தேயு 22 14), என்கிற கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்த உலகில் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் வெகு சிலரே, அவர்களில் அனைவரும் ஒரே மனநிலையில் பணி செய்வதில்லை. அருள் பணி செய்பவர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையைச் சேர்ந்தவர்கள் பல வகைகளில் ஈட்டும் செல்வத்தை மற்றும் உலக இன்பத்தை தூக்கி எறிந்து விட்டு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இறைவனுக்கு பணி செய்பவர்கள். உதாரணமாக பார்த்தோம் என்றால், கிபி 1957 முதல் 1963 ஆண்டுகள் வரை அமெரிக்க நாட்டின் பிரபலமாய் திகழ்ந்த இளம் ஹாலிவுட் நடிகையாக இருந்த டோளோரஸ் ஹாட் (Dolores Hart) தனது புகழ்பெற்ற, செல்வ செழிப்பு மிக்க வாழ்க்கையை விட்டுவிட்டு அனைவரும் வியக்கும் வண்ணம் இறை அழைத்தலை உணர்ந்தவராய் பெனடிக்ட் சபையின் மடத்துறவியானார்.
இன்றும் உண்மையான அழைத்தலுக்கு சாட்சியாய் திகழ்கிறார். இறைவனே செல்வமென கருதுபவர்களுக்கு உலக செல்வம் ஒரு பொருட்டாக அமைவதில்லை.. இத்தகைய அருள் பணி வாழ்வு தான் இறைவன் தரும் உண்மையான அழைப்பு.
இரண்டாம் தரப்பு பணியாளர்களை பார்த்தோம் என்றால், இறைவன் அழைப்பை ஏற்று அதை கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள். பண ஆசையால், உலக இன்பத்தால் மூழ்கி கடவுளுக்கும், மக்களுக்கும் பணி செய்வதில் விலகி சுயநலத்தோடு இறைவனையும், மதத்தையும், மனிதத்தையும் வைத்து அரசியல் செய்பவர்கள். உதாரணம் தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்.
அன்பிற்கு இனியவர்களே!
எது பணி வாழ்வு? அழைப்பா! அல்லது பிழைப்பா!
(மாற்கு10:17-22) நற்செய்தியில் பார்க்கிறோம் இயேசுவை பின்பற்ற விரும்பிய இளைஞருக்கு செல்வம் ஒரு தடையாக இருக்கிறது. உன்னிடம் இருக்கும் செல்வம் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடு என்று இயேசு கூறிய மறுகணமே மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அந்த இளைஞனுக்கு. திரும்பி சென்று விடுகிறான்.
எனவே அழைப்பு தரக்கூடிய பாடம் தன்னையே இழத்தல், தன்னிடம் இருக்கும் அனைத்தையும் இழந்து அல்லது துறந்து இறைவனை பற்றி கொள்ளுதல். புனித அகுஸ்தினார் இவ்வாறாக கூறுகிறார் ஆண்டவரே! என்னுள், என்னிடம், எனக்குச் சொந்தமானதாய் எது இருக்கிறது நான் உன்னிடம் கொடுப்பதற்கு. என்னிடம் இருக்கும் அனைத்தும் நீர் கொடுத்தவை தானே. ஏன் இங்கு நான் என்றாலே அங்கு நீர் தான் என்பார். இது அழைப்பு! தன்னையே துரத்தல் அழைப்பு; தனக்கு தனக்கு என்று சேர்த்தல் பிழைப்பு.
மாறிவரும் உலகில் மாற்றங்கள் எங்கும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கின்றன. நமது மாற்றமும் நடைபெற இறைவன் ஏசு இன்று அழைப்பு விடுக்கிறார். அருள் வாழ்வில் பயணிக்கும் நாம் எத்தகைய மனநிலையோடு இறைவனுக்கும், மனிதருக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். அழைப்பு கற்றுத்தரும் தன்னையே துரத்தலையா! அல்லது பிழைப்பு கற்றுத் தரும் அனைத்தையும் தனக்கு தனக்கு என்று அழைக்கப்படும் சேர்த்தழையா!
உண்மையான அழைப்பை பெற்று, அனைத்தையும் துறந்து இறைவனுக்கு பணி செய்பவர்கள் கிறிஸ்துவின் ஆட்சியில் பங்கு பெற வாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால், அருள் வாழ்வை கருவியாக பயன்படுத்தி அரசியல் செய்து கொண்டும், பிழைத்துக் கொண்டும் இருப்பவர்கள் எதிர்மறையாக கிறிஸ்துவுக்கு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் எந்தப் பக்கம்?
கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்க இட்டுச் செல்லும் அழைப்பையா! அல்லது கிறிஸ்துவிற்கு எதிராக தனக்கு தனக்கு என்று செல்வங்களையும், உலக இன்பங்களையும் சேர்க்க இட்டுச் சொல்லும் பிழைப்பையா!
சிந்திப்போம். கிறிஸ்துவை தமது அர்ப்பண வாழ்வால், பணியால் பிரதிபலிப்போம்.
.jpeg)
.jpeg)
.jpeg)

Very new and unique thought broo... Keep it up.
ReplyDeleteIt's a good start especially the heading which is very catchy (அழைப்பா! அல்லது பிழைப்பா!) There's a good content inside also... 👏Good work👏
ReplyDeleteNice work Louis. Very satisfactory work and your thoughts and reflections are deep. Never stop and Keep going.
ReplyDelete