Posts

Showing posts from October, 2024

அருள் பணி: அழைப்பா! அல்லது பிழைப்பா!

Image
  அருள் பணி: அழைப்பா! அல்லது பிழைப்பா! "தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்து   இருக்கிறார்;  தாம் அழைத்தோரை தமக்குஏற்புடையவராக்கி   இருக்கிறார்;   தமக்குஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்". ( உரோமையர் 8:30)             இறை இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! எது அருள் பணி? அழைப்பா! அல்லது பிழைப்பா! என்கிற மையக்கருத்தை ஆழமாக சிந்திக்க, அவற்றை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம். எது அருள் பணி என்கிற கேள்விக்கு இது அல்லவா அருள் பணி என்கிற பதில் அமைகிறது. அருள் பணி: இறைவனால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் இறைவனை அறிந்து, அன்பு செய்து, தொண்டு புரிந்து, தொழுது, அவரை அடைந்து, நிலையான பேரானந்த பெருவாழ்வு வாழ்வதே அருள் பணி.  அழைப்பு பெற்றவர்கள் பலர் ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர். (மத்தேயு 22 14), என்கிற கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்த உலகில் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் வெகு சிலரே, அவர்களில் அனைவரும் ஒரே மனநிலையில் பணி செய்வதில்லை. அருள் பணி செய்பவர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.  முதல் வகை...